Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

20 நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா ஜெயம் ரவியின் அகிலன்?

Advertiesment
20 நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா ஜெயம் ரவியின் அகிலன்?
, வெள்ளி, 17 மார்ச் 2023 (14:52 IST)
ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டை போட்டிகளை மையமாக வைத்து உருவான திரைப்படம் பூலோகம். இந்த படத்தை எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கி இருந்தார். இந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து அதே கூட்டணி இரண்டாவது படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்துக்கு அகிலன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் கடற்கரை பகுதிகளில் அதிகளவில் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகவேண்டிய இந்த திரைப்படம் தாமதம் ஆகி வந்த நிலையில் கடந்த மார்ச் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் அட்டர் ப்ளாப் ஆன இந்த படம் 20 நாட்களில் ஜி5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ஆண்டின் மெஹா பிளாக்பஸ்டர் பதான் படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!