Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா வேடத்தில் நடிப்பது சவாலானது - நித்யா மேனன் ஓபன் டாக்!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (15:37 IST)
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவரின் கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரும்  சவாலானது என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
 
பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார் நடிகை நித்யா மேனன். 
 
அதை பற்றி அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது , 
 
ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது நமக்கு பொறுப்பு தேவை,  சாதாரணமாக இதுபோன்ற படங்களில் நடித்துவிட முடியாது. படத்தில் எந்த ஒரு இடத்திலும் நித்யா மேனன் தெரியக்கூடாது. அந்த பொறுப்பும் கடமையும் இயக்குனருக்கு மட்டுமல்ல நடிக்கும் நடிகைகளுக்கும் இருக்க வேண்டும்.
 
இயக்குனர் பிரியதர்ஷினி என்னிடம் கதையை சொல்லும்போதே அவரது அர்ப்பணிப்பு புரிந்துவிட்டது. அதனால்தான் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன். உடலளவிலும் மனதளவிலும் ஜெயலலிதாவாக நான் மாற வேண்டியிருக்கிறது. அவரது முழு வாழ்க்கையையும் திரைக்கு கொண்டு வர இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
 
மேலும் எனக்கு கதையும் என்னுடைய வேடமும் மிகவும் முக்கியம். நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் சுவாரசியமான படங்களில் மட்டும்தான் நான் நடிக்க விரும்புகிறேன்.
 
இந்த துறையை அனுபவித்து பணிபுரிகிறேன். சின்ன வேடத்தில் நடித்தாலும் மகிழ்ச்சியாக அனுபவித்து நடிக்கிறேன். ஒவ்வொரு படமும் எனக்கு முக்கியம் என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார் .

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்.. என்ன நடந்தது?

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

தமிழ், தெலுங்கில் சக்கைப் போடு லவ் டுடே படத்துக்கு இந்தியில் இதுதான் நிலையா?

ரெட்ரோ படத்தின் முக்கிய அப்டேட்டைக் கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments