Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் எழுத படிக்க தெரியாமல் தவிக்கும் விஜய் மகன் … தாமதமாகும் சஞ்சய் படம்!

Webdunia
சனி, 25 நவம்பர் 2023 (07:51 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் சஞ்சய் லைகா நிறுவனத்துக்காக படம் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது முதல் சஞ்சய் இயக்கப் போகும் படத்தில் இளம் நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் இந்த படத்தின் பூஜை சென்னையில் ரகசியமாக நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பூஜையில் சஞ்சய்யின் தந்தை விஜய் கூட கலந்துகொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தாமதம் பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் திரைக்கதையை எழுதி வரும் சஞ்சய்க்கு தமிழ் எழுத படிக்க தெரியவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் அவர் ஆங்கிலத்தில் எழுதுவதை தமிழில் மொழிபெயர்க்க ஒரு ஆள்வைத்து வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங், இயக்குனர் பா ரஞ்சித் நெருங்கிய நண்பரா? அதிர்ச்சி தகவல்..!

ஸ்ருதிஹாசனை ’கூலி’ படத்தில் இணைந்த ‘பிகில்’ நடிகை.. ரஜினிக்கு இருவரும் மகள்களா?

சமந்தாவை சிறையில் தள்ள வேண்டும்.. மருத்துவரின் பதிவுக்கு விளக்கம் அளித்த சமந்தா..!

கடற்கரையில் ஜாலியாக நனைந்தவாறு போட்டோஷூட் நடத்திய மடோனா!

கிளாமர் உடையில் பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments