Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துபாய்க்கு தப்பிச்செல்ல முயன்ற நடிகையை வளைத்த பிடித்த அதிகாரிகள்!

Advertiesment
துபாய்க்கு தப்பிச்செல்ல முயன்ற நடிகையை வளைத்த பிடித்த அதிகாரிகள்!
, திங்கள், 6 டிசம்பர் 2021 (08:15 IST)
துபாய்க்கு தப்பிச்செல்ல முயன்ற நடிகையை வளைத்த பிடித்த அதிகாரிகள்!
மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படும் நடிகை ஒருவர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற போது மும்பை விமான நிலையத்தில் சுற்றி வளைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சுகேஷ் சந்திரசேகர் என்ற மோசடி மன்னனுடன் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டப்பட்ட நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நேற்று துபாய் செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு வந்தார் 
 
இந்த நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவர்களுக்கு அவுட்லுக் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே அவர் வெளிநாடு செல்லக் கூடாது என்றும் தடுத்து நிறுத்தினர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து துபாய் பயணத்தை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு 10 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்கி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நிலையில் சுகேஷ் என்பவர் யார் என்றே தனக்கு தெரியாது என ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறியிருந்தார் என்பதும் அதற்கு அடுத்த இரண்டே நாட்களில் சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாக்குலின் பெர்னாண்டஸ் முத்தம் கொடுத்த புகைப்படம் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'வலிமை’ படத்தின் அம்மா பாடலின் வரிகள்: இணையத்தில் வைரல்!