கார்த்திக்காக ‘ஜப்பான்’ டைட்டிலை விட்டுக்கொடுத்த லப்பர் பந்து குழுவினர்!

vinoth
சனி, 5 அக்டோபர் 2024 (11:55 IST)
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி 2 வாரங்களில் இதுவரை 27 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக இணைந்துள்ளது லப்பர் பந்து.

இந்நிலையில் இந்த படம் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் படத்துக்கு முதலில் ஜப்பான் என்றுதான் டைட்டில் வைத்திருந்தாராம் இயக்குனர் தமிழரசன். தயாரிப்பாளர் லஷ்மன் கார்த்தியின் நெருங்கிய நண்பர் என்பதால் அவரின் மூலமாக இந்த டைட்டிலைக் கேள்விபட்டு, அந்த டைட்டிலை தனக்குத் தரமுடியுமா என்று கேட்டுள்ளார். அப்படிதான் கார்த்தியின் 25 ஆவது படத்துக்கு ஜப்பான் என்று டைட்டில் சென்றுள்ளது. பின்னர் தமிழரசன் லப்பர் பந்து என தன் படத்துக்கு டைட்டிலை மாற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments