Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பிரபலம்… அவரே வெளியிட்ட அறிவிப்பு

Webdunia
சனி, 18 ஜூன் 2022 (09:09 IST)
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தற்காலிகமாக “தலைவர் 169” என்று அழைக்கப்பட்டு வந்த இந்த படத்தின் டைட்டில் ”ஜெயிலர்” என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வெளியான  போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது. அந்த போஸ்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது. போஸ்டரில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் பெயர் தவிர மற்றவர்கள் பெயர் இடம்பெறவில்லை.

இதனால் படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் பீஸ்ட் உள்ளிட்ட பல ஹிட் படங்களின் கலை இயக்குனர் DRK கிரண், ஜெயிலர் படத்தின் போஸ்டரை பகிர்ந்து, “என் கனவு” என்று டிவீட் செய்துள்ளார். இதன் மூலம் இவர்தான் ஜெயிலர் படத்தின் கலை இயக்குனர் என்பது உறுதியாகியுள்ளது. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments