Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷின் அடுத்த படத்தில் ‘ஜெயிலர்’ நடிகர்!

dhanush
, வியாழன், 1 செப்டம்பர் 2022 (13:27 IST)
தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கும் நடிகர் ஒருவr இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் தயாராக இருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்க இருக்கும் நிலையில் இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது
 
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் தற்போது விநாயகன் வில்லன் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த  படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படம் ரொம்ப நீளம்.. ரசிகர்கள் புகார்! – கோப்ராவில் 20 நிமிட காட்சிகள் நீக்கம்!