Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவுக்கு இதில் சம்மந்தமில்லை.. நான்தான் முழு பொறுப்பு! – இயக்குனர் ஞானவேல் விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (14:09 IST)
ஜெய்பீம் பட சர்ச்சை விவகாரத்தில் சூர்யாவை பொறுப்பேற்க சொல்வதில் நியாயமில்லை என அந்த படத்தின் இயக்குனர் ஞானவேல் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை பெற்றது.

அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இந்த படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இதுகுறித்து பேசியுள்ள ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் “ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்கு நடிகர் சூர்யாவை பொறுப்பேற்க சொல்வது நியாயமற்றது. இதற்கு இயக்குனராக நான் மட்டுமே முழு பொறுப்பு. யாரையும் புண்படுத்தும் நோக்கில் உள்நோக்கத்துடன் அந்த காட்சிகளை அமைக்கப்படவில்லை. சர்ச்சைக்குரிய அந்த சில வினாடி காட்சி முன்பே எங்கள் கவனத்திற்கு வந்திருந்தால் அதை நீக்கியிருப்போம். இதனால் மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் வருத்ததை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments