Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதனை மேல் சாதனை.. நொய்டா திரைப்பட விழாவில் ஜெய்பீம்!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (18:22 IST)
சூர்யா நடித்து வெளியாகி பல பாராட்டுகளை பெற்ற ஜெய்பீம் திரைப்படம் நொய்டா திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. இருளர் பழங்குடி மக்கள் வாழ்க்கை குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களையும் பெற்றது.

ஜெய்பீம் பெரும் வரவேற்பை பெற்ற சூழலில் ஆஸ்கர் விருது வரை சென்று வந்தது. சமீபத்தில் ஆஸ்கர் விழாவின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் ஜெய்பீம் படத்தின் காட்சிகள் இடம்பெற்றதை ரசிகர்கள் ஆர்வமாக ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது ஜெய்பீம் நொய்டாவில் நடைபெறும் 9வது சர்வதேச திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வ திரையிடலுக்கு தேர்வாகியுள்ளது. இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

டிரைலர் அடிச்ச ஹிட்டு… பெரும் தொகைக்கு முன்னணி ஓடிடியால் வாங்கப்பட்ட கேங்கர்ஸ்!

ஹிட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஹிப்ஹாப் ஆதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments