Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜகமே தந்திரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு – உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (09:22 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தினை பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தையும் எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென்று அமேசான் ப்ரைம் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தனுஷும் தயாரிப்பு தரப்பும் படத்தை திரையரங்கிலேயே ரிலிஸ் செய்வது என்பதில் உறுதியாக இருந்துள்ளனர். இந்நிலையில் இப்போது படத்தை பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவெடுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments