ஜகமே தந்திரம் ஓடிடி விலை இவ்வளவா? ஆச்சர்யத்தில் கோலிவுட்!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (16:08 IST)
ஜகமே தந்திரம் படத்தை நெட்பிளிக்ஸ் தளம் மிகப்பெரிய அளவில் தொகைக் கொடுத்து வாங்கியுள்ளதாம்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படம் விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. ஆனால் இதில் படத்தின் கதாநாயகன் தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருக்கு சம்மதம் இல்லை என சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளரோடு கருத்து மோதலில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தை நெட்பிளிக்ஸ் தளம் 55 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் பட்ஜெட்டே 60 கோடி ரூபாய் என்பதால் தொலைக்காட்சி மற்றும் மற்ற உரிமைகளை வைத்து வரும் தொகையில் தயாரிப்பாளர் லாபம் பார்க்க முடியும் என சொல்லப்படுகிறது. ஜகமே தந்திரம் திரைபடம் தனுஷின் சினிமா கேரியரில் அதிக தொகையில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments