ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப்!

vinoth
வியாழன், 5 டிசம்பர் 2024 (11:16 IST)
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகராக ஹரிஷ் கல்யாண் உருவாகி வருகிறார். இவர் அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு பொறியாளன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த அவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கொண்டு பெரும் பிரபலமானார்.

சமீபத்தில் அவர் நடித்த பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட்களாகி தற்போது அவரை நிலையான மார்க்கெட் கொண்ட நடிகராக ஆக்கியுள்ளன. இப்போது அவர் நடிப்பில் டீசல், நூறு கோடி வானவில் ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் அடுத்து 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை லிஃப்ட் படத்தை இயக்கிய வினீத் வரபிரசாத் இயக்கி தயாரிக்க உள்ளாராம். பேன் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments