தனிமைப்படுவோம் நம்மைக் காக்க; பின் ஒன்று படுவோம் நாடு காக்க. – வைரமுத்து டுவீட்
சீனாவில் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், இத்தாலி, ஈரான், எகிப்து, இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட நாடுகளுக்கு மிக வேகமாகப் பரவியது. ஆனால், நேற்று, சீன அரசு, சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்திருந்தது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 191 பேர் இந்தியர்கள், 32 பேர் வெளிநாட்டவர்கள். அதனால் இந்தியாவில் பாதிக்கப்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. இதில்,23 பேர் குணமடைந்துள்ளனர் என்கிறது இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை. மக்கள் தொகை அதிகம் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது.
இந்நிலையில், கொரொனா தொற்று இன்று மேலும் 35 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கொரானோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக உயந்துள்ளதாக மத்திய அமைச்சகப் புள்ளிவிவரங்கள் …தகவல் வெளியாகிறது.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
'நம்மைக் காத்தல்; நாடு காத்தல். இரு அறைகூவல் எதிரே. தனிமைப்படுவோம் நம்மைக் காக்க; பின் ஒன்று படுவோம் நாடு காக்க.' #CoronaStopKaroNa #coronavirusindia #IndiaFightsCorona என பதிவிட்டுள்ளார்.