Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘பாகுபலி’ திரைப்படத்திற்கு லண்டனில் கிடைத்த மிகப்பெரிய மரியாதை!

Webdunia
ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (07:04 IST)
கடந்த 2016ஆம் ஆண்டு பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், நாசர் நடிப்பில் உருவான ‘பாகுபலி’ திரைப்படம் வெளியானது. எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய இந்த படம் உலகம் முழுவதும் சக்கைபோடு போட்டது. இந்த படத்தின் வசூல் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. 
 
இந்த நிலையில் நேற்று லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் இந்த படம் இந்தியில் ஆங்கில சப்டைட்டிலுடன் திரையிடப்பட்டது. இந்த ஹாலில் மொத்தம் 5267 இருக்கைகள் கொண்ட நிலையில் அனைத்து இருக்கைகளும் நிறைந்திருந்தன.
 
இந்த ஹால் தொடங்கி சுமார் 150 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழி படங்களும் திரையிட்டதில்லை. முதல்முறையாக ஒரு இந்திய மொழியில் இந்த படம் திரையிடப்பட்டது இந்த படத்திற்கு மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே பெருமை தரும் வகையில் உள்ளது
 
ராயல் ஆல்பர்ட் ஹாலில் இந்த படம் திரையிடப்படுவதை அடுத்து பிரபாஸ், எஸ்.எஸ்.ராஜமெளலி உள்பட படத்தின் பணிபுரிந்த முக்கியமானவர்கள் லண்டனுக்கு சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

தேர்தலில் ஜெயித்தாலும் சினிமாவை விட்டு விலக முடியாது: கங்கனா ரனாவத்

குபேரா படத்துக்காக 10 மணிநேரம் படத்துக்காக ரிஸ்க் எடுத்து நடித்த தனுஷ்!

நியு ஏஜ் அன்பே சிவம் ‘ரோமியோ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்!

வார இறுதி நாட்களில் வசூல் மழை பொழியும் அரண்மனை 4… மூன்று நாள் வசூல் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments