Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கை மாறுகிறதா தளபதி 68 படம்… அட்லியைத் துரத்தும் பிரபல தயாரிப்பாளர்!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (15:22 IST)
ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அட்லி, அடுத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக ஆனார். அதையடுத்து இப்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தை முடித்ததும் அவர் மீண்டும் விஜய்யை இயக்க உள்ளாராம். இந்நிலையில் இந்த படத்தை மிக அதிக பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையும் சமீபத்தில் நடந்ததாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அந்த படத்தைக் கைப்பற்ற மெர்சல் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி கைப்பற்ற முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது. மெர்சல் படத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த படத்தை தனக்கு வழங்குமாறு அவர் கேட்க முயற்சி செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணமா? இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் பரபரப்பு..!

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments