Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு பட காப்பியா சிவகார்த்திகேயனின் மிஸ்டர். லோக்கல்?

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2019 (18:44 IST)
சீமராஜா படத்துக்கு பிறகு எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படத்துக்கு மிஸ்டர். லோக்கல் என பெயர் வைத்துள்ளனர்.   
 
இதில் வேலைக்காரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். எஸ்கே13 என அழைக்கப்பட்ட இப்படத்துக்கு மிஸ்டர். லோக்கல் என பெயர் வைத்துள்ளார்கள்.  
 
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் ஸ்டைலாக ஒரு நாற்காலியில் அமர்ந்து சிரித்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். 
 
வரும் கோடை விடுமுறை நாட்களில் படம் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். ஹிப் ஆப் தமிழா இசையமைத்துள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.  மிஸ்டர். லோக்கல் போஸ்டரை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் டுவிட்டரில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள்.  
 
ஆனால், இப்பத்தின் டைட்டில் ஏற்கனவே தெலுங்கில் உள்ளது. நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான நேனு லோக்கல் படத்தின் டைட்டிலும் இந்த டைட்டிலும் ஒத்துபோகிறது. எனவே இப்போதே அந்த படத்தின் கதையும் இதுவும் ஒன்றோ என சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments