Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யை ஜோக்கர் என விமர்சித்தாரா ஸ்ருதிஹாசன்?... சர்ச்சையானப் பதிவு!

Advertiesment
ஸ்ருதிஹாசன்

vinoth

, சனி, 11 அக்டோபர் 2025 (10:00 IST)
தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார்.  கடைசியாக தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்தார்.

சமீபத்தில் ரிலீஸான ‘கூலி’ திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மகளாக அவர் நடித்திருந்தார். ஆனால் அவரது கதாபாத்திரம் ரசிகர்களால் மோசமாக ட்ரோல் செய்யப்படும் அளவுக்கு பலவீனமாக இருந்தது. இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தற்போது தன்னுடைய சமூகவலைதளப் பதிவு ஒன்றின் காரணமாக வைரல் ஆகியுள்ளார்.

அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் “ஒரு கோமாளியைக் கோமாளி போல நடிப்பதற்காக விமர்சிக்கக் கூடாது. நம்மை நாமேதான் சர்க்கஸுக்கு சென்றதற்காக குறை சொல்லிக் கொள்ள வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் விஜய் கரூர் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் விவாதத்தையும் பல சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் ஸ்ருதியின் இந்த பதிவு விஜய்யைதான் கோமாளி என்று சூசகமாக விமர்சிப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிறை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!