Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நடிகரிடம் 25 கோடி ரூபாய் கடனாக பெற்றாரா சமந்தா?

பிரபல நடிகரிடம் 25 கோடி ரூபாய் கடனாக பெற்றாரா சமந்தா?
, சனி, 5 ஆகஸ்ட் 2023 (13:46 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம்வந்த தற்போது படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டுள்ளார். அவர் இப்போது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது தவிர அவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ள குஷி படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இவை தவிர அவர் கைவசம் வேறு படங்கள் இல்லை.

மையோசிட்டிஸ்க்காக எடுத்துக்கொண்ட சிகிச்சைகளில் இன்னும் அவர் முழுமையாக உடல்நலம் அடையவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது பாலி தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் விரைவில் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் தெலுங்கு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் ‘சமந்தா பிரபல நடிகர் ஒருவரிடம் 25 கோடி ரூபாய் கடனாகப் பெற்றுள்ளதாக’ தெரிவித்துள்ளது. ஆனால் அந்த நடிகர் யார் என்பதை அந்த ஊடகம் தெரிவிக்கவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''ஜெயிலர்'' பட புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு