Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீஸ்ட் படத்தைப் பார்த்த ரஜினி… ரியாக்‌ஷன் என்ன? வைரலாக பரவும் செய்தி

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (15:52 IST)
பீஸ்ட் படம் இரண்டு தினங்கள் ஆகியுள்ள நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பீஸ்ட் திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. படத்தின் மோசமான திரைக்கதை காரணமாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். நேற்றே சமூகவலைதளங்களில் மீம்களும் ட்ரோல்களும் உருவாகி பரவின. இந்நிலையில் இன்று கேஜிஎப் 2 ரிலீஸாகி மிகப்பெரிய பாராட்டுகளை ரசிகர்களிடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று பீஸ்ட் இரண்டாம் நாளில் நகர்ப்புற பகுதிகளை தவிர மற்ற புறநகர் பகுதிகளில் பெரிய வரவேற்பு இல்லை என சொல்லப்படுகிறது. இரண்டாம் நாளே திரையரங்குகள் காலியாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் இந்த படத்தை சன் டிவி அலுவலகத்தில் பார்த்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் இயக்க உள்ள நிலையில் அதற்காக ரஜினி பார்த்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. வழக்கமாக படம் பார்த்தால் ரஜினி மனம் விட்டு அந்த படத்தின் கலைஞர்களைப் பாராட்டுவார். ஆனால் இந்த படம் பற்றி அவர் எதுவும் பெரிதாக சொல்லவில்லை என்று சொல்லப்படுகிறது.

source valaipechu

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments