நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The GOAT என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் கடைசி படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த படத்துக்கான இயக்குனர் பட்டியலில் வெற்றிமாறன், அட்லி, ஹெச் வினோத், திரி விக்ரம் என பலரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில் இப்போது திடீரென அந்த பட்டியலில் பிரபுதேவாவின் பெயரும் இணைந்துள்ளது. பிரபுதேவா ஏற்கனவே விஜய்யை வைத்து போக்கிரி மற்றும் வில்லு ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.