சசிகுமார் நடித்துவரும் படத்தில், அவருக்கு ஜோடி ஹன்சிகா இல்லையாம். அவருக்குப் பதில் வேறொரு நடிகை நடித்து வருகிறார்.
முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்துவரும் படம் ‘கொடிவீரன்’. இந்தப் படத்தில் ஹன்சிகா நடிக்கப் போவதாகத் தகவல் வெளியானது. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் பார்த்தால், வேறொரு நடிகை நடித்துக் கொண்டிருக்கிறார். அவர், ‘ரேணிகுண்டா’ நாயகி சனுஷா. ‘ரேணிகுண்டா’வுக்குப் பிறகு ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் நடித்தவர், 4 வருடங்கள் கழித்து திரும்பி வந்திருக்கிறார்.
“என் படிப்புக்காகத்தான் நடிப்பை விட்டேன். அப்படியும் தவிர்க்க முடியாமல் ஒருசில மலையாளப் படங்களில் நடித்தேன். இப்போது படிப்பு முடிந்துவிட்டதால், நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறேன். இப்போது இந்தப் படத்தில் மட்டுமே நடித்து வருகிறேன். தொடர்ந்து நடிக்க நல்ல கதைகளாக தேடிக் கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் சனுஷா.