Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் 65 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா ? -

விஜய் 65 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா ? -
, புதன், 13 நவம்பர் 2019 (15:27 IST)
விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்குனர் தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிகில் படத்துக்குப் பின் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ’விஜய் 64’ என அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்கப்போவது யார் என்று கேள்வி எழுந்துள்ளது.

இதற்காக இயக்குனர் பேரரசு மற்றும் அருண்ராஜா காமராஜ் ஆகியோரின் பெயர்கள் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தன. ஆனால் இப்போது விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு வெளியான தடம் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் மகிழ் திருமேனி. இவர் சொன்ன கதை விஜய்க்கு பிடித்ததால் அவருக்கே அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு அளிக்க விஜய் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொது இடத்தில் பிரபல நடிகை காதலருடன் சில்மிஷம்... வெளியே துரத்திய அதிகாரிகள் !