Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்- மகேஷ் நாராயணன் படம் நிறுத்தமா? பரபரப்பு தகவல்

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (19:22 IST)
கமல்ஹாசன் அடுத்து இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவித்தார்.

விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து கமல் நடிக்கும் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதையடுத்து அந்த படத்தை விஸ்வரூபம் படத்தின் படத்தொகுப்பாளர் மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார். இதை கமல்ஹாசனே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மகேஷ் நாராயணன் c u soon மற்றும் மாலிக் ஆகிய படங்களின் மூலமாக வெற்றிகரமான இயக்குனராக அறியப்படுபவர்.

ஆனால் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த படம் பற்றிய வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது இந்த படம் நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல் அடுத்தடுத்து ஹெச் வினோத், மணிரத்னம், வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோர் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்தியன் 2 படத்திலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments