Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் உண்மை சம்பவத்தை இயக்கும் ஹெச் வினோத்! கமல்ஹாசனே சபாஷ் போட்ட கதை!

மீண்டும் உண்மை சம்பவத்தை இயக்கும் ஹெச் வினோத்! கமல்ஹாசனே சபாஷ் போட்ட கதை!
, வியாழன், 8 டிசம்பர் 2022 (08:51 IST)
ஹெச் வினோத் விரைவில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முன்பாக அவர் யோகி பாபு நடிப்பில் ஒரு சிறு பட்ஜெட் படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசனுக்காக ஹெச் வினோத் உருவாக்கியுள்ள கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வினோத், சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களும் உண்மை சம்பவங்களின் அடிப்படையிலேயே உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மற்றொரு ஓடிடியிலும் வெளியாகும் காந்தாரா… வெளியான தகவல்