Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''புஷ்பா 3'' படத்தில் மெயின் வில்லன் இவரா?

Sinoj
திங்கள், 8 ஏப்ரல் 2024 (17:44 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் ராஸ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் ஆகியோருடன் இணைந்து நடித்த படம்  புஷ்பா. 
 
சுகுமார் இயக்கி, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ்  நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.400கோடி வரை வசூல் வாரிக் குவித்தது.
 
இதையடுத்து, அல்லு அர்ஜூந் சுகுமார் கூட்டணியில் புஷ்பா -2  வேகமாக உருவாகி வருகிறது. 
 
'புஷ்பா தி ரைஸ் 'என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
 
இந்த நிலையில், இப்படத்தின் டீசரை அல்லு அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 11.07 மணிக்கு ரிலீஸாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
 
இந்த  நிலையில், விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என தெரிகிறது.
புஷ்பா 2 படத்தைத் தொடர்ந்து  3 ஆம் பாகத்தை எதிர்பார்க்கலாம் என அல்லு அர்ஜூன் கூறியிருந்த நிலையில்,  புஷ்பா -3 படத்தில் நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக  நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 
சமீபத்தில் ஜெகபதி பாபு அளித்த பேட்டியில், ’’புஷ்பா -3 படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கிறேன். புஷ்பா -2 ஷூட்டிங்  நிறைவடைய  உள்ள நிலையில், புஷ்பா-3 பட ஷூட்டிங்கில் பங்கேற்க ஆவலுடன் இருக்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.
 
இதனால் மேலும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

ரி ரிலீஸில் மாஸ் காட்டிய துப்பாக்கி… ரசிகர்கள் கொண்டாட்டம்!

சூரியின் கருடன் எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ்?... வெளியான தகவல்!

சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய்யின் கோட் பட நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments