பிக் பாஸ் வீட்டில் புதிதாக வர இருப்பவர் பிந்துமாதவியா?: அதுக்குள்ள ஆர்மியை ஆரம்பிச்சுட்டாங்க!
பிக் பாஸ் வீட்டில் புதிதாக வர இருப்பவர் பிந்துமாதவியா?: அதுக்குள்ள ஆர்மியை ஆரம்பிச்சுட்டாங்க!
15 பேர் கலந்து கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 6 பேர் வெளியேற்றப்பட்டு 9 பேர் தான் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் ஆரம்பித்து 34 நாட்கள் களித்து புதிய போட்டியாளர் ஒருவரை பிக் பாஸ் வீட்டில் களம் இறக்குகிறார்கள்.
நடிகை ஒருவரை பல்லக்கில் தூக்கி வருவது போல நேற்று புரோமோ ஒன்று வெளியானது. ஆனால் அவர் யார் என்பதை காட்டவில்லை. முகம் மட்டும் தெரியாமல் அவரது உடல் தெரிந்தது.
இந்நிலையில் புதிதாக களம் இறங்க உள்ள அந்த நடிகை யார் என்பதை அதிகாரப்பூர்வமாக இன்று இரவு தான் நாம் தெரிந்துகொள்ள முடியும். ஆனாலும் அந்த நடிகை யார் என்பதை நெட்டிசன்கள் கணித்து விட்டனர்.
இன்று பிக் பாஸ் வீட்டிற்கு வரும் புதிய போட்டியாளர் பிந்து மாதவி தான் என்று நெட்டிசன்கள் தீர்மானித்து விட்டனர். அவர் தான் வர இருக்கிறார் என்பது உறுதியாகும் முன்னரே பிந்துமாதவி ஆர்மியை உருவாக்கியுள்ளனர்.
ஓவியாவுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஓவியா ஆர்மி என்ற பெயரில் பலரும் செயல்படுகின்றனர். இந்நிலையில் பிந்துமாதவி போட்டிக்கு வரும் முன்னரே அவரது பெயரில் ஆர்மியை துவங்கி விட்டுள்ளனர். இருந்தாலும் ஓவியா தான் எங்கள் வீட்டு பெண் என ஓவியா ஆர்மி பதிலடி கொடுத்துள்ளது.
பிந்துமாதவி பிக் பாஸ் வீட்டிற்கு வரும் பட்சத்தில் வரும் காலங்களில் ஓவியா ஆர்மிக்கும், பிந்து மாதவி ஆர்மிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.