Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்யா-சாயிஷா திருமண செய்தி வதந்தியா? நடிகையின் சந்தேகம்

ஆர்யா-சாயிஷா திருமண செய்தி வதந்தியா? நடிகையின் சந்தேகம்
, வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (19:48 IST)
நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும், மார்ச் 8,9 ஆகிய தேதிகளில் இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை ஆர்யாவோ அல்லது சாயிஷாவோ தங்களது டுவிட்டர் உள்பட சமூக வலைத்தள பக்கங்களில் உறுதி செய்யவில்லை
 
இந்த நிலையில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆர்யாவை திருமணம் செய்ய போட்டி போட்ட போட்டியாளர்களில் ஒருவரான அபர்நதி என்பவர், ஆர்யா-சாயிஷா திருமணத்தை நம்ப மறுக்கின்றார். ஆர்யா-சாயிஷா இருவரும் திரைப்படங்களில் பிசியாக இருக்கும் நிலையில் திருமணம் செய்ய வாய்ப்பே இல்லை என்றும், இது 99% வதந்தி என்றும், இது உண்மையாக இருந்திருந்தால் நிச்சயம் இருவரும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் பதிவு செய்திருப்பார்கள் என்றும் சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.
 
webdunia
மேலும் சூர்யா, ஆர்யா, சாயிஷா நடித்து வரும் 'காப்பான்' படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்தவே இந்த திருமண செய்தி என்ற வதந்தியை கிளப்பிவிட்டிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆர்யா-நயன்தாரா திருமணம் என 'ராஜா ராணி' படத்தின் படப்பிடிப்பின்போது வதந்தி கிளம்பியது என்பது அனைவரும் தெரிந்ததே. 
 
எனவே திருமண செய்தி உண்மையா? அல்லது வதந்தியா? என்பதை ஆர்யா, சாயிஷா தெளிவுபடுத்த  வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்யாவுக்கு கல்யாணமா? வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த எங்க வீட்டு மாப்பிளை குஹாசினி!