Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்ணாத்ததான் கடைசி படமா? ரஜினியின் முடிவு என்ன?

அண்ணாத்ததான் கடைசி படமா? ரஜினியின் முடிவு என்ன?
, வெள்ளி, 4 டிசம்பர் 2020 (11:15 IST)
நடிகர் ரஜினியின் கடைசி படமாக அண்ணாத்ததான் இருக்கும் என சொல்லப்படுகிறது.

பல வருடங்களாக கன்னித்தீவு போல இழுத்துக் கொண்டிருந்த ரஜினியின் அரசியல் வருகை இப்போது உறுதியாகியுள்ளது. ஜனவரி மாதம் கட்சி ஆரம்பித்து சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றும் ரஜினி அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டியது தனது கடமை எனவும் கூறியுள்ளார்.

இதனால் அண்ணாத்த படம்தான் அவரின் கடைசி படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ரஜினிகாந்தின் வயது மற்றும் உடல்நிலை காரணமாக அரசியல் மற்றும் சினிமா என இரட்டைக் குதிரையில் அவரால் பயணிக்க முடியாது என்பதால் அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிடலாம் என்ற முடிவில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்படிப்பட்ட நண்பர்களைதான் நான் எதிரிகளாக காட்டப்போகிறேன் – இயக்குனர் டிவீட்!