Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம்… அச்சுறுத்தலா ? வரமா ?– ஒருப் பார்வை…

நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம்… அச்சுறுத்தலா ? வரமா ?– ஒருப் பார்வை…
, வெள்ளி, 4 ஜனவரி 2019 (17:33 IST)
அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் ஆகிய ஸ்ட்ரீமிங் தளங்களின் வருகை திரையரங்கங்களை இல்லாமல் ஆக்கிவிடும் என ஒரு செய்தி சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

தியேட்டர் சென்று படம் பார்க்கப் பிடிக்காதவர்கள், பட்ஜெட் காரணமாக தியேட்டர்களுக்கு செல்ல முடியாதவர்கள், குறைந்த கட்டணத்தில் உலக சினிமாக்கள் ,வெப் சீரியஸ்களைக் காண விரும்புவோர் மற்றும் சென்சார் இல்லாமல் படங்களைக் காண விரும்புவோர் எனக் குறிப்பிட்டப் பகுதியினர் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஸ்ட்ரிமிங் தளங்களுக்கு மாறி வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட கட்டணத்தில் ஆண்டுதோறும் படங்கள் மற்றும் சீர்ஸ்களைப் பார்க்கும் இந்த வசதி இன்னும் சில ஆண்டுகளில் அபரிமிதமாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால திரையரங்குகளின் தாக்கம் குறையும் எனவும் ஒரு சிலர் கருத்துக் கூறி வருகின்றனர். மேலும் திரையரங்குகளில் படங்களை ரிலிஸ் செய்ய முடியாதவர்கள் அல்லது ஸ்ட்ரிமீங் தளங்களுக்காகவே படங்களை உருவாக்குவோரின் எண்ணிக்கை அதிகமாக்யும் எனவும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் ஒன்றுதிரண்டு தியேட்டர்களில் படம்பார்க்கும் சூழல் வருங்காலத்தில் இருக்காது என்ற அச்சம் உருவாகியுள்ளது. மேலும் நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்றவை மிகப்ப்ரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் என்பதால் அவர்களின் கட்டுப்பட்டுக்கு உட்பட்டுதான் படம் எடுக்க முடியுமெனெவும் கூறப்படுகிறது. வரும் பொங்கலுக்குக் கூட கதிர் நடித்துள்ள சிகைப் படம் திரையரங்குகளில் ரிலிஸாகாமல் நேரடியாக் ஜீ 5 தளத்தில் ரிலிஸாகிறது. இது போன்ற முயற்சிகள் தமிழ் சினிமாவிற்கு ஏதேனும் ஒரு வகையில் நன்மை அளிக்குமா ?.
webdunia

இப்படி அச்சப்படும் அளவுக்கு ஸ்ட்ரீமிங் இணையதளங்கள் ஆபத்தானவைதானா? அல்லது மாற்று திரைப்படங்களுக்கான மற்ரொரு வாசலா? எனப் பலவாறு விவாதங்கள் நடக்கின்றன.

இது குறித்து சினிமா இயக்குனரும் சினிமா வியாபாரம் குறித்து தொடர்ந்து பேசி வருபவருமான கேபிள் சங்கர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது;-

’சிகை எனும் படம் நேரடியாய் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் வெளியாவது குறித்து அய்யோ.. அம்மா என்று கூக்குரல் இடுகிறவர்களுக்கு ஒரு தகவல். ஆனானப்பட்ட டேவிட் பிஞ்சர். வில்ஸ்மித், ப்ராட் பிட் நடித்த படமெல்லாம் நேரடி நெட்ப்ளிக்ஸில் வெளியாகி வெற்றிகரமாய் ஓடியிருக்கிறது. ஏற்கனவே நிறைய இண்டிபெண்டண்ட் படங்கள் இம்மாதிரி ஏற்கனவே வெளியாகியிருக்கிறது. ஹிந்தியில் சமீபத்தில் ரிஷிகபூர் நடித்த படமும், நிறைய ஃபீல் குட் ஹிந்தி திரைப்ப்டங்களும் வெளியாகி பெயர் பெற்றிருக்கிறது. தமிழில் கூட.. ஸோ.. கதிர் படமே என்றெல்லாம் பதறியடிக்க தேவையில்லை, பல சமயங்களில் தியேட்டருக்கு வந்து நஷ்டமடைவது தடுக்கப்படும். இதைப் பற்றி புலம்புகிறவர்கள் பெரும்பாலும் திரைப்படம் வியாபாரம் குறித்து ஏதும் அறியாது தெரிந்தது போல பேசிக் கொண்டிருப்பவர்கள் தான். இதன் தயாரிப்பாளர்களுக்கு தெரியும் எது லாபமென. ரிலீஸே செய்ய முடியாமல் இருக்கும் தரமான படங்கள் கொட்டிக் கிடக்க, அதற்கு ஒரு மார்கெட் உருவாவது சிறப்பான ஒன்று.’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீடூ ,எனக்கு பழிவாங்கும் ஆயுதமாக உதவியது - பிரபல நடிகை