Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

100 கோடி சம்பளத்தை எட்டினாரா அஜித்? வெளியான தகவல்!

100 கோடி சம்பளத்தை எட்டினாரா அஜித்? வெளியான தகவல்!
, திங்கள், 21 மார்ச் 2022 (17:50 IST)
சமீபகாலங்களாக அஜித் ஒரு படடத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே அதிக இடைவெளியை எடுத்துக்கொள்கிறார். அதுபோலவே ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்துக்கான அறிவிப்பையும் வெளியாகுமாறு பார்த்துக் கொள்கிறார். ஆனால் இப்போது அவரின் அஜித் 61 படம் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.

சில தினங்களுக்கு வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் விக்னேஷ் சிவன் செயல்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்காக அஜித்துக்கு லைகா நிறுவனம் 100 கோடி ரூபாய் சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய்க்குப் பிறகு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் பட்டியலில் அஜித்தும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே பாரதிராஜா… ஒரே இளையராஜாதான் – இசைஞானியின் ஜாலி பேச்சு!