Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரியன் படத்தின் ரீமேக்கா அஜித் 62… பரவும் தகவல்!

Advertiesment
அஜித் 62
, செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (08:00 IST)
அஜித் 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் ஒரு கொரியன் படத்தின் ரீமேக் என தகவல்கள் பரவி வருகின்றன. இதற்காக லைகா கொரியன் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியதாகவும், ஆனால் மகிழ் திருமேனி அதில் விருப்பம் காட்டாததால், இப்போது அவரின் சொந்த கதையையே படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்னேஷ் சிவனிடம் அஜித் 62 படம் பற்றி கேள்வி… அதற்கு அவர் சொன்ன பதில்!