Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சன்னி லியோனுக்கும் கோவில்! எங்கே போகுது நாடு?

Advertiesment
, சனி, 13 மே 2017 (07:28 IST)
இன்னும் ஒருசில வருடங்களில் பெரும்பாலான சினிமா நடிகர்களுக்கு அவர்களது ரசிகர்கள் கோவில் கட்டி கும்பாபிஷேகம் கூட நடத்திவிடுவார்கள் போல தெரிகிறது. இப்போதே விஜய், அமிதாப் போன்ற நடிகர்களுக்கு கோவில் கட்டி தீபாரதனை, வழிபாடு, பிரார்த்தனை ஆகிய கிறுக்குத்தனங்கள் நடந்து கொண்டிருக்கின்றன



 


இந்த நிலையில் ஆபாச பட நடிகையும், பாலிவுட் கவர்ச்சி கன்னியுமான சன்னிலியோன் இன்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மும்பையில் தற்காலிக கோவில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று அந்த கோவில் திறக்கப்பட உள்ளதாகவும் டுவிட்டரில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தி உண்மையா? அல்லது வதந்தியா? என்று தெரியவில்லை. ஆனால் இதுமட்டும் உண்மையாக இருந்தால், இந்தியாவும் இந்திய மக்களும் எங்கே சென்று கொண்டிருக்கின்றார்கள் என்ற கேள்விதான் எழுகிறது. இந்தியாவை வல்லரசாக்குவது இளைஞர்கள் கையில் உள்ளது என்று அப்துல்கலாம் கூறினார். ஆனால் ஒருசில இளைஞர்கள் இவ்வாறு நடிகர், நடிகைகளை தெய்வமாக கும்பிட்டு வருவது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தியேட்டரே இல்லாத நாட்டில் டிரெண்டிங் ஆன 'விவேகம்'