Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இரும்புத்திரை, என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஹிட்” - விஷால்

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (11:31 IST)
‘இரும்புத்திரை, என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஹிட்’ என விஷால் தெரிவித்துள்ளார்.
விஷால் நடிப்பில் கடந்த 11ஆம் தேதி ரிலீஸான படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்திருந்தார். வில்லனாக அர்ஜுன் கலக்கியிருந்தார். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படம், கிட்டத்தட்ட 300 தியேட்டர்களில் ரிலீஸாகி, வசூலைக் குவித்தது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படம் ‘அபிமன்யுடு’ என்ற பெயரில் ஜூன் 1ஆம் தேதி தெலுங்கில் ரிலீஸாக இருக்கிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால், “இரும்புத்திரை, என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஹிட். டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் இந்தப் படத்தில் இருப்பதாகக் கூறி தமிழ்நாட்டில் சிலர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு காட்சிகளை ரத்து செய்தோம். சென்சார் போர்டில் இருந்து சான்றிதழ் வாங்கிய பிறகு படத்தைத் தடைசெய்யும்  உரிமை யாருக்கும் இல்லை” என்று பொங்கினார்.
‘அபிமன்யுடு’வின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் இசை வெளியீட்டு விழா ரத்து  செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

நீங்களும் உங்கள் துணிச்சலும் என்றும் நினைவில் இருப்பீர்கள்… ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜுக்கு மாரி செல்வராஜ் இரங்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments