Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோப்ரா படத்தின் இயக்குனரை எக்கச்சக்கமாக நம்பும் கிரிக்கெட் வீரர்!

கோப்ரா படத்தின் இயக்குனரை எக்கச்சக்கமாக நம்பும் கிரிக்கெட் வீரர்!
, வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (09:06 IST)
கோப்ரா படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை தந்துள்ளது.

விக்ரம் நடித்த ‘கோப்ரா’  திரைப்படம் வரும் 31-ஆம் தேதி ரிலீஸான நிலையில் மோசமான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்த நிலையில் 20 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பெரும் பொருட்செலவில் உருவான கோப்ரா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் படம் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து மீது தயாரிப்பாளர் லலித் கடுமையான கோபத்தில் இருப்பதாகவும், அதனால் அவருக்கு ரெட் விதிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அஜய் ஞானமுத்து மேல் கோப்ரா படத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் அபாரமான நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அவருக்காக பைனான்ஸ் செய்ய தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அஜய் இயக்கும் அடுத்த படம் அவரின் சொந்தப் படமாக இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லோகேஷ்- லிங்குசாமி- லாரன்ஸ் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படம்!