பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
வித்தியாச இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள உலகின் முதல் நான் லீனியர் திரைப்படம் என்றும் விளம்பரப்படுத்தப் பட்டு வருகிறது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த வாரம் வெள்யாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படம் ஓடிடியில் வெளியாகாமல் இருந்தது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பார்த்திபன் “இன்றோ நாளையோ இரவின் நிழல் அமேசான் ப்ரைமில் வெளியாகும்” எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சொன்னபடி படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து “தொழில்நுட்பக் காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் ரிலீஸ் ஆகும். மீண்டும் உங்களை காக்க வைத்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.