Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’இரவின் நிழல்’ படத்துக்கு முன்பே வந்த சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் இதுதான்… வெளியான தகவல்!

’இரவின் நிழல்’ படத்துக்கு முன்பே வந்த சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் இதுதான்… வெளியான தகவல்!
, சனி, 16 ஜூலை 2022 (10:22 IST)
பார்த்திபன் இயக்கி நேற்று வெளியான இரவின் நிழல் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது.

இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள உலகின் முதல் நான் லீனியர் திரைப்படம் என்றும் விளம்பரப்படுத்தப் பட்டு வருகிறது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் நேற்று வெள்யாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்போது இரவின் நிழல் திரைப்படத்துக்கு முன்பாகவே ஈரானிய திரைப்படமான fish and cat என்கிற திரைப்படம் நான்லீனியராக சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டு சில வருடங்களுக்கு முன்பே வெளியானதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிக்க வரும் அமிதாப் பச்சனின் பேத்தி… பாலிவுட் நட்சத்திரங்கள் வாழ்த்து!