Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புயலாக பரவும் அமீர் கான் மகளின் ஹாட் ஃபிட்னெஸ் வீடியோ!

புயலாக பரவும் அமீர் கான் மகளின் ஹாட் ஃபிட்னெஸ் வீடியோ!
, சனி, 21 டிசம்பர் 2019 (11:43 IST)
பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான  நடிகர் அமீர் கான் இந்திய சினிமாவிலே முக்கிய நடிகராக தென்படுகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து விசித்திரமான நடிப்பினை வெளிப்படுத்தி வரும் அமீர்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். 
 
தற்போது 53 வயதாகும் அமீர்கானுக்கு  1986 ஆம் ஆண்டு ரனா தத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.  பின்னர் இவர்களுக்கு  ஜுனைத் என்ற மகனும், ஐரா என்ற மகளும் பிறந்தனர். பின்னர் 2002 ஆம் ஆண்டு மனைவி ரனா தத்தாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணத்தால் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். பின்னர் 2005ம் ஆண்டு  கிரண் ராவ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். கிரண் ராவ் அமீர்கான் நடித்த லகான் படத்தில்  துணை இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. பின்னர் இவர்கள் இருவருக்கும் அசாத் ராவ் கான் என்ற மகன் பிறந்தார். முதல் மனைவியை பிரிந்தாலும் அமீர்கான் தனது மூன்று குழந்தைகளையும் பாரபட்சமின்றி பாசத்துடன் பார்த்துக்கொள்கிறார். 
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஐரா கான் பாலிவுட் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுத்து எல்லையற்ற கவர்ச்சியை வெளிப்படுத்தி போட்டோஷூட் நடத்தி பாலிவுட் சினிமாவின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பாலிவுட் சினிமா ரசிகர்களின் கவனத்தை திசை திரும்பியிருக்கிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Whoops... I'm okay


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தந்தையை பெருமைப்பட வைத்த நடிகர் சூரியின் மகன் – அஸ்வின் பாராட்டு !