தனக்கென தனி ஆப் தொடங்கினார் சரத்குமார்

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (13:54 IST)
பாலிவுட் பிரபலங்களைப் போல, தனக்கென தனி ஆப் தொடங்கியுள்ளார் சரத்குமார்.
திரைப்பட நடிகராக, பத்திரிக்கை துறை சார்ந்தவராக, ஒரு அரசியல் இயக்கத்தை நடத்திவரும் தலைவராக, பன்முகத்தன்மை கொண்டு விளங்கும் ஆர்.சரத்குமார், ஒரு செயலியின் மூலமாக அனைத்து தரப்பு மக்களோடும் நேரிடையாக தொடர்பு  கொள்ளவும், கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும் ஒரு இணைப்புப் பாலமாக ASK என்னும் செயலியை அறிமுகப்படுத்தி  இருக்கிறார்.
 
இச்செயலி, அவ்வப்போது நிகழும் மாநில, தேச மற்றும் உலக நிகழ்வுகளையும், அவை தொடர்பான உடனுக்குடன் ஏற்படும் பதிவுகளையும், மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்ப்பதற்காகவும், ASK குழுவோடும், சரத்குமாரோடும்  தகவல்  பரிமாற்றங்களை நேரிடையாகப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சனைகளை விரைவில் தீர்த்து வைக்கப்படும் களமாகவும், சமூக சீர்திருத்தத்திற்கான தளமாகவும், குடிமக்கள் எளிதில் அணுகக்கூடிய உற்ற தோழனாகவும் இச்செயலியின் செயல்பாடு அமைய உள்ளது. பொதுமக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் என்னென்ன, அவை எந்தெந்த வழிகளில் தீர்வு காணப்பட்டன, எத்தகைய அணுகுமுறை உபயோகப்படுத்தப்பட்டது போன்ற பல்வேறு விவரங்கள் இச்செயலியில் அடங்கி இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments