Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய சூப்பர்ஸ்டார்கள் நடித்திருக்கும் குறும்படம்! #Family

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (08:57 IST)
இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் குறும்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளுள் சினிமா துறையும் ஒன்றாக உள்ளது. இதையடுத்து சினிமாவில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக இந்தியாவின் முன்னணி நடிகர்களான மிதாப் பச்சன், ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், சோனாலி குல்கர்னி, புரொசஞ்சித் சட்டர்ஜி, ஷிவ ராஜ்குமார் மற்றும் தில்ஜித் தோசஞ்ச் இணைந்து ‘பேமிலி’ எனும் குறும்படத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த குறும்படத்தில் இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களாக நடித்துள்ளனர். வீட்டின் முதியவரான அமிதாப் பச்சனின் சன் கிளாஸை வீட்டின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் தேடிக் கண்டுபிடிப்பதே இந்த திரைப்படத்தின் கதை. இந்த படத்தின் காட்சிகள் ஒரே வீட்டில் எடுக்கப்பட்டது போல இருந்தாலும் அனைத்தும் தனித்தனியாக அவரவர் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டது என்பதே இதன் சிறப்பம்சம்.

விளம்பரப் பட இயக்குனரான பிரசூன் பாண்டே இயக்கியுள்ள இந்தக் குறும்படத்தை உருவாக்க கல்யாண் ஜுவல்லர்ஸ், சோனி டெலிவிஷன் நிறுவனம் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் உதவியிருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments