Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

vinoth
செவ்வாய், 2 ஜூலை 2024 (12:48 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. பாடல்களும் வெளியாகியுள்ளன. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளன. இந்த படத்துக்கான வியாபாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரைலரில் அதிக காட்சிகளில் கமல் இல்லை. அதனால் இந்த பாகத்தில் அவர் குறைவான நேரமே வருவாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் டிரைலரில் ஜூலை வெளியீடு என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அதே போல சில போஸ்டர்களிலும் ரிலீஸ் தேதி இல்லாமல்தான் வெளியானது. இதற்குக் காரணம் படம் சென்சார் செய்யப்படவில்லை என்பதுதான் காரணமாம். ஆனால் நேற்று இந்தியன் 2 படத்தின் தமிழ் வெர்ஷன் சென்சார் பணிகள் முடிந்துவிட்டதால் இனிமேல் ஜூலை 12 ரிலீஸ் தேதி என்று அறிவிக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments