Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னை செண்ட்ரஸ் ஸ்டேஷனில் நடக்க உள்ள ஷூட்டிங்… இந்தியன் 2 அப்டேட்!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (07:46 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மேலும் சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம். அந்த ஷூட்டிங் முடிந்தபின்னர்தான் ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என தெரிகிறது. இப்போது ஆந்திராவில் இந்தியன் 2 ஷூட்டிங் நடந்து வருகிறது.

இப்போது விறுவிறுப்பாக இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னை செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் எந்த படத்தின் ஷூட்டிங்கும் நடந்ததில்லை. இந்நிலையில் இப்போது இந்தியன் 2 ஷூட்டிங் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments