Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியன் 2: ரிலீஸ் தேதி குறித்த லேட்டஸ்ட் தகவல் இதோ..!

Advertiesment
இந்தியன் 2: ரிலீஸ் தேதி குறித்த லேட்டஸ்ட் தகவல் இதோ..!
, திங்கள், 4 பிப்ரவரி 2019 (12:01 IST)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி மெகாஹிட் ஆன "இந்தியன்" படத்தின் இரண்டாம் தற்போது எடுக்கிறார்கள்.


 
இப்படத்தில் கமலுடன், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் ஆகியோர் நடிப்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது. படத்திற்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 
 
மேலும் இப்படத்தில் கமலுக்கு பேரனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் பின்னர் அவர் படத்தில் இருந்து விலகி விட்டதாகவும், அந்தக் கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நடிகர் ஆர்யாவிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. 
 
கமலின் அற்புதமான நடிப்பில் 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடுக்ஷன் தயாரிக்கிறது. கமல்ஹாசன் முதியவர் , இளமை தோற்றம் என இரு வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், இப்படம் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினமன்று வெளியாகக்கூடும் என்ற செய்தி நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் மூலம் தெரியவந்ததுள்ளது . ஆதலால் மிகவிரைவில் படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்பா அஜித்தை போன்றே குட்டி தல கூட கார் பிரியர்..! வைரலாகும் கியூட் வீடியோ!