Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுமுறை முடிந்து வேலை நாள் தொடங்கியதும் சுத்தமாகப் படுத்த இந்தியன் 2 வசூல்!

vinoth
செவ்வாய், 16 ஜூலை 2024 (17:16 IST)
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படம் உலகெங்கும் 5000க்கும் மேற்பட்ட திரைகளில் ஜூலை 12 ரிலீஸானது.இந்நிலையில் படம் ரிலீஸானதில் இருந்து படத்துக்குக் கலவையான விமர்சனங்களேக் கிடைத்து வருகின்றன. முக்கியமாக வழவழ என்று நீளும் நீண்ட சொற்பொழிவுக் காட்சிகள் இன்றைய ரசிகர்களை அதிருப்தியடையச் செய்துள்ளன.

முதல் பாகத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த வசனம், திரைக்கதை மேக்கப் மற்றும் நடிப்பு என எதுவும் இரண்டாம் பாகத்தில் ரசிகர்களைக் கவரவில்லை. ஆனாலும் படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. ஆனால் அடுத்த நாளே வசூல் படுத்துவிட்டது என்று தகவல்கள் வெளியாகின. அடுத்தடுத்த விடுமுறை நாட்களிலும் வசூல் தொடர்சரிவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் முதல் வாரம் முடிந்து இரண்டாம் வாரத்தின் வேலை நாளான திங்கள் கிழமை இந்த படத்தின் வசூல் எதிர்பாராத அளவுக்கு குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. திங்கள் கிழமை அன்று இந்திய அளவில் இந்த படம் சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments