Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுதந்திர தினத்தில் தனுஷ், விக்ரம் பிரபு படங்களுடன் மோதும் நயன்தாரா

சுதந்திர தினத்தில் தனுஷ், விக்ரம் பிரபு படங்களுடன் மோதும் நயன்தாரா

சுதந்திர தினத்தில் தனுஷ், விக்ரம் பிரபு படங்களுடன் மோதும் நயன்தாரா
, வியாழன், 28 ஜூலை 2016 (14:24 IST)
சுதந்திர தினத்தை முன்னிட்டு நயன்தாரா நடித்த தெலுங்குப் படம் தமிழில் வெளியாகிறது.


 
 
சுதந்திர தினத்தை முன்னிட்டு தனுஷ் நடித்த தொடரி, விக்ரம் பிரபு நடித்துள்ள வாகா ஆகிய படங்கள் ஆகஸ்ட் 12 -ஆம் தேதி திரைக்கு வருகின்றன. அத்துடன் நயன்தாரா நடித்த படமொன்றும் வெளியாகிறது.
 
தெலுங்கில் பல வருடங்களுக்குப் பிறகு நயன்தாரா நடித்த படம், பாபு பங்காரம். வெங்கடேஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா நாயகி. நயன்தாராவுக்கு தமிழில் நல்ல மார்க்கெட் இருப்பதால் ஆகஸ்ட் 12 -ஆம் தேதி பாபு பங்காரத்தை தமிழில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
 
மாருதி இயக்கியிருக்கும் பாபு பங்காரத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி ஒன்றும் பெரிய சூப்பர்ஸ்டார் அல்ல : நானேபடேகர் அதிரடி