பிரபலமான ஒருவரின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிக்கப் போகிறார் விஜய் சேதுபதி.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
									
										
								
																	
	 
	சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘மாமனிதன்’. இவர்கள் இருவரும் நான்காவது முறையாக  இணையும் படம் இது. இவர்களின் கடைசிப் படமான ‘தர்மதுரை’ 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியதால், மறுபடியும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார்.
 
									
										
			        							
								
																	
	 
	தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரின் வாழ்க்கை வரலாறு தான் இந்தப் படம் என்கிறார்கள். அதுவும், எல்லோருக்கும் தெரிந்த  பிரபலமான ஒருவரின் கதைதான் இந்தப் படமாம். தன் கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு இந்தப்  படத்தில் நடிக்கப் போகிறார் விஜய் சேதுபதி. ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருகிறது.