உலகம் முழுவதும் நேற்று வெளியான ‘பாகுபலி-2’, ஒரே நாளில் 125 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.
எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் நடித்துள்ள படம் ‘பாகுபலி-2. 2015ஆம் ஆண்டு வெளியான ‘பாகுபலி’யின் முந்தைய கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. பல்வேறு இந்திய மொழிகளில், 6000 திரையரங்குகளில் நேற்று வெளியானது.
இந்தப் படம், முதல் நாளில் மட்டுமே 125 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இதுவரை எந்தப் படமும் இந்த அளவுக்கு வசூல் செய்ததில்லை என்கிறார்கள். அத்துடன், இத்தனை தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆனதில்லை என்றும் கூறுகின்றனர். முதன்முறையாக இந்த அளவுக்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது ‘பாகுபலி-2’. உலக அளவிலான வசூலையும் சேர்த்தால் 150 கோடி ரூபாயைத் தாண்டுமாம்.