Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாளத்தில் கால் பதித்த ‘விக்ரம் வேதா’ இசையமைப்பாளர்

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (11:08 IST)
‘விக்ரம் வேதா’ இசையமைப்பாளரான சாம் சி.எஸ்., மலையாளப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 
ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாளப் படம் ‘ஒடியன்’. மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், மஞ்சு வாரியர் மற்றும்  பிரகாஷ் ராஜ் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பாடல்களுக்கு ஜெயச்சந்திரன் இசையமைக்க, பின்னணி இசை அமைத்துள்ளார்  சாம்.
 
இந்தப் படம் பேண்டஸி திரில்லர் என்பதால், பழைய காலத்து இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இசையமைத்துள்ளார் சாம். குறிப்பாக, 6 அடியில் உள்ள மூங்கில் புல்லாங்குழலை, அதை வாசிக்கத் தெரிந்த வயதான பெண்மணியை வாசிக்கவைத்து பயன்படுத்தியுள்ளார் சாம்.
 
‘கரு’, ‘கொரில்லா’, ‘லக்‌ஷ்மி’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘மிஸ்டர் சந்திரமெளலி’, ‘அடங்க மறு’, ‘வஞ்சகர் உலகம்’ ஆகிய படங்களுக்கு  இசையமைத்து வருகிறார் சாம் சி.எஸ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments