Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் பாலா, ஜோதிகா படத்தின் போட்டோஷுட்

சென்னையில் பாலா, ஜோதிகா படத்தின் போட்டோஷுட்
, செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (15:54 IST)
பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்ட போட்டோஷுட் சென்னையில் நடந்தது.

 
பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ஜோதிகா நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தை ஈயான் ஸ்டூடியோஸ்  மற்றும் பி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இளையராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
ஜி.வி.பிரகாஷ் - ஜோதிகா இருவரையும் வைத்து போட்டோ ஷூட் ஒன்றை முடித்துள்ளார் பாலா. படப்பிடிப்புக்கு முன்பாக  பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலாவின் நாச்சியார் பர்ஸ்ட் லுக்