Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலிக்கு எதிராக காயத்ரி ரகுராமை திசை திருப்பிய ஆர்த்தி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலிக்கு எதிராக காயத்ரி ரகுராமை திசை திருப்பிய ஆர்த்தி!
, வெள்ளி, 7 ஜூலை 2017 (11:49 IST)
திரையுலக பிரபலங்கள் 13 பேரை வைத்து பிரபல தொலைக்காட்சியில் நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவராக காயத்ரி ரகுராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜூலியை தவிர மற்றவர்கள் எல்லாம் திரையுலகை சார்ந்தவர்கள்  என்பதால் ஜூலி மீது பலமுனை தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

 
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 9வது நாளாக நடந்து வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் ஜூலியை வம்புக்கு இழுத்த நடிகை  ஆர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆர்த்திக்கு ஆதரவாக கேப்டன் காயத்ரி பேசினார். இதனை தொடர்ந்து கோபமடைந்த ஜூலி, கேமரா முன் நின்று நான் இப்பவே இங்கிருந்து போகணும், என்னை வெளியேற்றுங்க என கூறினார். 
 
அதன்பின் அறைக்கு சென்ற ஜூலியை மீண்டும் வம்பிழுத்த ஆர்த்தி, நீ நர்ஸா? இல்லை விஜேவா என கேட்டதோடு, ஏன் நர்ஸ்  வேலையை விட்டுட்டு இங்க ஏன் வந்த? என கேள்வி எழுப்பியதோடு, போலி வேஷம் போட்டு எங்ககிட்டயே நடிக்காத என்று  பேசினார்.
 
இந்நிலையில் இதனை பார்த்து கொண்டிருந்த சக்தி மற்றும் ஆரவ் ஜூலிக்கு ஆதரவாக பேசினர். பின்னர் காயத்ரியை தனியாக அழைத்த ஆரவ், அவரிடம் ஆர்த்தி உங்களை வேண்டுமென்றே ஜூலிக்கு எதிராக திசை திருப்பி விடுகிறார். இப்போ மட்டுமல்ல  நிறைய தடவை பார்த்திருக்கிறோம், ஆர்த்தி உங்களை சரியாக பயன்படுத்தி கொள்கிறார் என்றனர். இதனை கேட்ட காயத்ரி  அதிர்ச்சி அடைந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்துக்காக பாடலாசிரியராக மாறிய இயக்குனர்