Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்துக்காக பாடலாசிரியராக மாறிய இயக்குனர்

அஜித்துக்காக பாடலாசிரியராக மாறிய இயக்குனர்
, வெள்ளி, 7 ஜூலை 2017 (11:45 IST)
‘விவேகம்’ இயக்குனர் சிவா, அஜித்துக்காக இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார்.
 



அஜித் நடிப்பில் சிவா மூன்றாவது முறையாக இயக்கியுள்ள படம் ‘விவேகம்’. செர்பியாவில் நடைபெற்ற இறுதிக்கட்ட ஷூட்டிங், நேற்றுடன் முடிந்துவிட்டது. ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய, பரபரப்பாக இயங்கி வருகிறது படக்குழு. இந்தப் படத்தில், 2 பாடல்களையும் எழுதி இருக்கிறாராம் இயக்குனர் சிவா.

அவர் எழுதிய ‘தலை விடுதலை’ பாடல், வருகிற 10ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இந்தத் தகவலை, இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே வெளியான ‘சர்வைவா’ பாடல் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து, அடுத்த பாடலுக்காகக் காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியை மறுபடியும் வம்புக்கு இழுத்த சுப்ரமணிய சுவாமி